இன்று மாணவ மாணவியர் கிராமம், நகரம் என இல்லாது அனைவரும் தமிழ் ஆங்கிலம் தவிர பல மொழிகளை பணம் கொடுத்து கற்றுவருகின்றனர். எனவே இளைய சமுதாயம் விரும்பும் மொழிகளை பள்ளிகளில் கற்றுத்தருவது அவசியம். இலவசமாக இருந்தால் ஏழை மாணவர்கள் பயன்பெறுவர். வேலை வாய்ப்பு பெற மும்மொழி என்ன எத்தனை மொழிகள் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம், தவறு இல்லை. மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு என்பது இந்தக் காலக்கட்டத்தில் எடுபடாது. இதைவைத்து அரசியல் நடத்த முடியாது? அரசியல் வாதிகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் எல்லா மொழிகளும் கற்றுத்தருகின்றர், ஆனால் அரசு பள்ளிகளில் மற்ற மொழிகள் சொல்லித்தர எதிர்ப்பு தெரிவிப்பது, மது ஆலைகளை நடத்திக்கொண்டு மதுக்கடைகளை மூட போராடுவது போலத்தான். மக்கள் ஏமாற மாட்டார்கள். இந்தியோ அல்லது அயல் மொழி கற்றல் தான் வேலைவாய்ப்பு என யாரும் சொல்லவில்லை. ஒருவேளை வேலைகிடைத்து, வெளி மாநிலங்களுக்குச் சென்றால் பயன்படும் என்பதுதான். தமிழர்களின் எண்ணம். அரசியல் வாதிகளின் வாரிசுகள் இந்தி, தமிழ் தவிர மற்ற பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிஷ் மொழிகளை கற்று வருகின்றனர் என்பதை மறுக்க முடியுமா? எனவே அரசுப் பள்ளிகளில் எல்லா மொழிகளையும் அரசு இலவசமாக கற்றுத்தர ஆவண செய்ய வேண்டும் என சட்டத்தமிழ் வாசகர்கள் விருப்பம்.